என்.செல்வராஜ் உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை!
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வனத்துறை அமைச்சருமான என்.செல்வராஜ் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி திலைநகரில் உள்ள அவரது இல்லத்தில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என்.செல்வராஜ் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினரும், மாமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.