சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்!

0 309
Stalin trichy visit

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கும்பூர்வயல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 38), இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கொடைக்கானலில் இருந்து தனபால் (வயது 42) என்பவருடன் காரில் வந்து கொண்டிருந்தார். கார் தொட்டியம் அருகே

வந்து கொண்டிருந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் ஆம்னி காரில் பயணம் செய்த ஜெயக்குமாருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.