காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்!

0 350
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்

மாவட்ட தலைவர் செண்பக செல்வி தலைமை வகித்தார். செயலாளர் அனந்தலட்சுமி வரவேற்றார். இதில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 187 ஆய்வக நுட்புனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். ஆய்வக நுட்புனர்களுக்கான பதவி உயர்வினை உடனே வழங்க வேண்டும். புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில்

கிரேட் 2 பணியிடத்துக்கு டிஎம்எல்டி பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைக ளில் 10 வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆய்வக காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.