வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது குண்டாஸ்; “பெண்கள் மீது கை வைத்தால் கடும் நடவடிக்கை” கமிஷனர் எச்சரிக்கை!
திருவானைக்காவல் அருகில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வீட்டினுள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பாதுரை மகன் ராஜா(வயது 40) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ராஜா தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசார ணையில் தெரிந்தது. அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் ராஜாவுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முக்கியமாக, திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர கமிஷனர் கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.