கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கிவைத்துப் பார்வையிட்டனர். அருகில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்

அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோஇருதயராஜ், ப.அப்துல் சமது, துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், நகர்நல அலுவலர் டாக்டர். யாழினி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) டாக்டர்.எஸ்.லட்சுமி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர்.சாவித்திரி, மாமன்ற உறுப்பினர்கள் சோபியாவிமலாராணி, விஜயலட்சுமி கண்ணன், க.சுரேஷ்குமார், எஸ்.விஜயலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.