பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்து மாலை அணிவித்த கொடூரம்!

0 699
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர்(வயது 35). பிரபல ரவுடியான இவர் மீது இப்பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை மண்ணச்சநல்லூர் வெங்ககுடியில் உள்ளது. அந்த தொழிற்சாலையில் அவர் நேற்றிரவு கட்டிலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று

அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது. படுகொலை செய்த மர்ம கும்பல் கெளரி சங்கர் உடலுக்கு மாலை அணிவித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.