கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

0 347
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி

இரண்டு நாட்கள் ஏழு சுற்று போட்டிகளாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. ஏழு சுற்றுகள் கொண்ட செஸ் போட்டியில் 22 கல்லூரிகளிலிருந்து 35 மாணவர்களும், 19 கல்லூரிகளிலிருந்து 28 மாணவிகளும் பங்கேற்றனர். ஏழு சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  மாணவர்கள் பிரிவில் பிஷப் கல்லூரியை சேர்ந்த

எம்.பரத்கல்யாண், 6 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஜெ.ஜெ.நவீன் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியை சேர்ந்த எம்.ரமணன் 5. 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், தேசிய கல்லூரியை சேர்ந்த என்.தமிழன்பன் 5.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தை சேர்ந்த ஆர்.கே.சபரிஷ் 5.5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும், புத்தணாம்பட்டி நேரு நிணைவு கல்லூரியை சேர்ந்த கே.கருணாகரன் 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.

மாணவிகள் பிரிவில் நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியை சேர்ந்த  எஸ்.ஜீவிகா, 6 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த டி.பூஜா 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த கே.சத்யப்ரியா 5.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும்,  ஶ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியை சேர்ந்த ஆர்.அனிதா 5.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலை கல்லூரியை சேர்ந்த ஆர்.எஸ்.சந்தியா 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும், கரூர் அன்னை மகளிர் கல்லூரியை சேர்ந்த டி. பூமிகா 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும் பிடித்தனர். மாணவ, மாணவிகள் பிரிவில்

சமமான புள்ளி எடுத்தவர்கள் புக்-ஹோல்ஸ் விதிமுறைகளின் படி முதல் 6 இடங்கள் நிர்ணயிக்கபட்டன. முதல் 6 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரி உடற்கல்வி

பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும்  விளையாட்டு செயலாளர் ஆர். காளிதாசன் மற்றும்  ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் பி.எஸ். ஷா இன் ஷா ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.