அளவு குறைவாக போடுவது பற்றி கேட்டவர் மீது தாக்குதல்; பங்கு ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது!

0 1,464
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கல்லணை பிரிவு ரோடு அருகே ஒரு தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்கில் பொன்விளைந்தான்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் (25) அவரது அண்ணன் மணிகண்டன் மற்றும் கடம்பங்குடியை சேர்ந்த நண்பர் சக்திவேல் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு உள்ளனர்.

அப்பொழுது பெட்ரோல் போடும்போது அளவு குறைவாக போடுவதாக குறித்து பெட்ரோல் பங்கு ஊழியருக்கும் அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்பிரகாஷ் (19) பாலமுருகன் (24) ஆகிய இருவரும் கூத்தைப்பார் மற்றும் பாரதிபுரத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கிருந்து 20 பேருக்கு மேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் சிமெண்ட் கல்லை கொண்டு கட்டண்களைக் கொண்டு பலமாக தாக்கி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வசந்தகுமார் மற்றும் மணிகண்டனை உடனடியாக அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்கு ஊழியர்களான பிரகாஷ் பாலமுருகன் அவர்கள் நண்பர்களான மனோஜ் மணிவண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் பாஜக நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Leave A Reply

Your email address will not be published.