“பசுமை வேதியியல்” கருத்தரங்கம்!
ருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாமன்றம் மற்றும் வேதியியல்துறை இணைந்து பசுமை வேதியியல் என்னும் தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடத்தினர். கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். முதல் நாள் கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் ரமேஷ், திருச்சி அண்ணா பல்கலைக்கழக
வேதியல் துறை தலைவர் ஜோதி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 2-ம் நாள் நிகழ்ச்சியில் கோவை அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் பொன்னுசாமி 12 அம்ச கோட்பாடுகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு மாசற்ற விவசாய நிலங்களை தர வேண்டும் என்றும், தனது ஆய்வுக்கருத்துக்களை தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வெங்கடபதி, பார்த்தசாரதி, கிருத்திகா, விக்டோரியா, சங்கர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பேராசிரியர் அன்பரசு நன்றி கூறினார்.