மத்திய அரசை கண்டித்து காங். கண்டன ஆர்ப்பாட்டம்!

0 327
Stalin trichy visit

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல். டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அதனை கண்டித்து இன்று திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக மோடி அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட

துணைத்தலைவர்கள் வில்ஸ் முத்துக்குமார், திருச்சி நிஜா வீரப்பா, மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், பொன் தமிழரசன், வக்கீல் விக்னேஷ், ஸ்ரீரங்க கோட்ட நிர்வாகிகள் பொருளாளர் தியாகராஜன், துணைத்தலைவர்கள் கதர் ஜெகநாதன், செல்வி குமரன், கிருஷ்ணமூர்த்தி, கோட்ட பொதுச்செயலாளர்கள்

தியாகராஜன், சத்தியா, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி கனக ஜோதி, கமலா சத்யா, வார்டு தலைவர்கள் சௌந்தரராஜன், பண்ணை சரவணன், வடிவேல், கார்த்திகேயன், சக்தி வி.எஸ்.முருகன், திலீபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.