மணப்பாறை நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரமன்ற ஒப்பந்த குழு உறுப்பினர், பணி நியமன குழு உறுப்பினர் மற்றும் வரி மேல்முறையீட்டு மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் என மொத்தம் 3 குழுவிற்கு 6 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டி மறைமுக தேர்தல் இன்று காலை தேர்தல் நடத்தும் அதிகாரி சியாமளா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 10 நகர மன்ற உறுப்பினர்கள் மட்டுமே

கலந்து கொண்டனர். திமுக கூட்டணி, மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும். அதிமுக 13வது வார்டு உறுப்பினர் வாணி உள்ளிட்ட 17 பேர் கலந்து கொள்ளவில்லை. இதனால் கோரம் இல்லாததால் தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சியாமளா அறிவித்தார். மணப்பாறை நகர் மன்ற துணைத்தலைவர் தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நியமனக்குழு உறுப்பினர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.