நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் கைது!

0 360
Stalin trichy visit

திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 40). இவர் மத்திய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென் றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப் பியோடினார். இதில் திருடன், திருடன் என கூச்சலிட்டதை அடுத்து அவ்வழியே சென்றவர்கள் அந்த

வாலிபரை மடக்கி பிடித்து கன்டோன்மென்ட் குற் றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 22) என்பதும், இவர் திருச்சியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து குணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.