நியமன குழு உறுப்பினர்கள் தேர்வு!
திருச்சி மாநகராட்சியில் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் கணக்குக்குழு தலைவராக 49வது வார்டு உறுப்பினர் லீலாவும், பொதுசுகாதாரக்குழு தலைவராக 42வது வார்டு உறுப்பினர் நீலமேகமும், கல்விக்குழு தலைவராக 63வது வார்டு உறுப்பினர் பொற்கொடியும், பணிகள் குழு தலைவராக

58வது வார்டு உறுப்பினர் கவிதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட அனைவரும் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் சான்றிதழ் வழங்கினார். அருகில் துணை மேயர் திவ்யா உள்பட பலர் உள்ளனர்.