திருச்சி பாலக்கரை பீமநகரை சேர்ந்தவர் நவாஸ்(வயது 50). இவர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை சர்வீஸ் ரோட்டில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 28ம் தேதி இரவு கடைக்கு வெளியே வைத்திருந்த வேன் இரும்பு வீலை ஒருவர் திருடி, தட்டு ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது
அவரை கையும் களவுமாக பிடித்த நவாஸ், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், இரும்பு வீல் திருடியவர் பாலக்கரை கீழபடையாட்சி தெருவை சேர்ந்த ராமலிங்கம்(வயது 36) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த இரும்பு வீல் மற்றும் தட்டு ரிக்ஷாவை பறிமுதல் செய்தனர்.