“பாதுகாப்பு அற்ற முறையில் மின்கம்பி அமைப்பு” மின்சாரம் பாய்ந்து பலியான சிறுமி!

0 399
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது வேதவர்ஷினி(வயது 6). இவர் ஏவூர்அய்யம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த மின்சார இணைப்பு வயரின் துணை கம்பமாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு குழாயை பிடித்துள்ளார். போதிய பாதுகாப்பு இன்றி அமைக்கப்பட்டிருந்த

அந்த குழாயில் மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கசிவானது வேதவர்ஷினி மீது பாய்ந்துள்ளது. இதனால் அவர் அதே இடத்தில் சிலை போன்று நின்றிருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வேதவர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் வேதவர்ஷினியின்

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமி மின்சாரம் தாக்கி பலியான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அவசர அவசரமாக வந்த மின்சார வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு இன்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.