ஊராட்சி எழுத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

0 630
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரையாம்பட்டியில் வசித்து வருபவர் ரஜினி காந்த்(வயது 39). இவர் சித்தாநத்தம் கிராமத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். சித்தாநத்தம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த அடைக்கலம்(வயது 26), அன்பழகன்(வயது 32), ராசலிங்கம்(வயது 36) ஆகிய மூவரும் குடிநீர் விநியோகம் கேட்டு கடந்த 1ம் தேதி எழுத்தர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மதுபோதையில்

சென்று அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மணப்பாறை போலீசார் அடைக்கலம், அன்பழகன், ராசலிங்கம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.