எரிபொருள் உருளைக்கு மாலை அணிவித்து காங். ஆர்ப்பாட்டம்

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப் பாறையில், நாள்தோறும் விலை உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை நகர தலைவர்

 

 செல்வா முன்னிலை வகித்தார். மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந் துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இருச்சக்கர வாகனங்கள், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து,

 

நாள்தோறும் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வை கண்டித்தும், இதுபற்றி நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.