குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

0 432
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மூர்த்தி(வயது 34). இவர் தனது லெட்சுமிக்கு மொட்டையடித்து காது குத்துவதற்காக புதுக்கோட்டை தென்னங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேற்று காலை குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு மேஜை பூட்டு உடைக்கப்பட்டு

அதில் இருந்த சாவியை எடுத்து இரண்டு பீரோக்களையும் திறந்து உள்ளே இருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து மூர்த்தி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.