மாற்றுத்திறனாளிக்கு அழுத்தம் கொடுக்கும் பஞ்., தலைவர்!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைளுக்கான சங்க மாவட்ட தலைவர்குமார் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், எனது சங்க உறுப்பினர் ஜெகதீஸ்குமார் 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாவார். இவர் புதூர் உத்தமனூர் வணிக
வளாகத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். முறையாக வாடகையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில், கடையை ஏலம் விடப்போவதாகவும், உடனே கடையை காலி செய்ய வேண்டும் என புதூர் உத்தமனூர் பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார். மாற்றுத்னாளியான ஜெகதீஸ்குமார் வாழ்வாதாரம் காக்கும் வகையில் அவருக்கே கடைய ஒதுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.