“நன்னடத்தை விதிமீறல்” 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு!
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல்நிலைய சரித்திரபதிவேடு ரவுடி மணிகண்டன்(வயது 26) மற்றும் பாலக்கரை காவல்நிலைய சரித்திரபதிவேடு ரவுடி பாண்டி (என்கிற) வீரமுத்து ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர்கள் பிணையப்பட்ட அறிக்கையின்படி மேற்படி ரவுடிகளை நிர்வாக- செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன் ஆஜர் செய்ததின் பேரில், நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். மேலும் ரவுடிகள் மணிகண்டன் மற்றும் பாண்டி (என்கிற) வீரமுத்து ஆகியோர் நன்னடத்தை
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தபின்பும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், நன்நடத்தை நிபந்தனைகளை மீறிய மேற்கண்ட ரவுடிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி மணிகண்டன் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 247 நாட்களும் மற்றும் ரவுடி பாண்டி (என்கிற) வீரமுத்து என்பவருக்கு 284 நாட்கள் சிறையில் கழிக்க செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 2 ரவுடிகளும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.