11ம் தேதி முதல் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு நேர்காணல்!

0 475
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தில் 80 கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களுக்கு திருச்சி பழைய கோழிப்பண்ணை வளாகம் கொட்டப்பட்டுவில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக் குநர் அலுவலக வளாகத்தில் வருகிற 11ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. பின்னர், 18ம் தேதி மற்றும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. நேர் காணலில் கலந்து கொள்பவர்கள் கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருத்தல் வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருத்தல்

வேண்டும். நேர்காணலுக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடிதம் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நேர்காணலுக்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவர்கள் திருச்சி மாவட்ட www.trichirappalli.nic.in என்ற இணையதள முகவரியில் அவர்களுக்கான நேர் காணல் தேதி மற்றும் நேரம்

ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகுதிகளுக்கான அனைத்து மூலச் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அசலுடன் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கான அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்காணல் நடைபெறும் வளாகத் திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.