“ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் பீரோவை தூக்கி சென்று நகை–பணம் கொள்ளை” விஏஓ பைக்கும் திருட்டு!

0 1,133
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. ஓய்வு பெற்ற தாசில்தாரான இவர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் அவரது மகன் மணிகண்டன் மற்றும் மருமகள் ஜெயப்பிரியா உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர். இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்ட நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி தூங்கிக் கொண்டடிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு பின்னர் சாவித்திரி அறையில் இருந்த

பிரோவை வீட்டிற்கு வெளியே தூக்கிச் சென்று சிறிது தூரத்தில் உள்ள ஒரு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இன்று காலை கதவை திறக்கமுடியாததால் மணிகண்டன் தனது நண்பருக்கு தொடர்பு கொண்டு அவர் வந்து வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்த அறையின்

கதவை திறந்து விட்ட பின்னர் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் உள்ள சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவா என்பவரின் வீட்டில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.