“மணல் கடத்த நூதன ஐடியா” டாட்டா சுமோ பறிமுதல்; டிரைவர் கைது

0 532
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேல விளாங்குளம் பகுதியில் நல்ல கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து டாட்டா சுமோவில் மணல் கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் டாட்டா சுமோவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட துவாக்குடி வடக்கு மலை அண்ணா சாலையை சேர்ந்த மாதவன் மகன் டாட்டா சுமோ டிரைவர் அய்யனார்(வயது 19) என்பவரை திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். மேலும்

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்த டாட்டா சுமோ உரிமையாளர் தங்கம் மகன் மகேஷ் (என்கிற) தோடு மகேஷ்குமார்(வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா சுமோ பறிமுதல் செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.