சாலையோர குப்பைக்கு மர்மநபர் தீ வைப்பு; “நான் 3 நாட்களாக ஊரில் இல்லை” என பதில் அளிக்கும் ஊ.ம.தலைவர்!

0 542
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்பூர் பகுதியில் உய்யக்கொண்டான் கரை சாலை உள்ளது. இந்த சாலைவழியாக குமரேசபுரம், கூத்தைப்பார், எழில்நகர், பத்தாளப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வெல்போர் பகுதியில் சாலையின்

இருபுறமும் குப்பைகள் பெரிய அளவில் நாள்தோறும் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் ஆங்காங்கே பறந்து சென்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த இடத்தைக் கடக்கும்போது கையில் மூக்கைப்பிடித்துக் கொண்டுதான் சென்று வருகின்றனர். இந்த குப்பைகளை வேறு ஒரு இடத்தில் கொட்டுவதற்கு இடமில்லாமல் என்னசெய்வதென்று

தெரியாமல் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் பெல்பூர் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்மநபர் தீ வைத்துள்ளார். இதனால் திருவெறும்பூரில் இருந்து பெல்பூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் பற்றி தெரியாமல் செல்வதுடன் புகையினால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட

பிரச்சினைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள உயிர் மரங்களும் தீயில் எரிந்து போகிறது. இதுபோல் இந்த பகுதியில் உள்ள குப்பைகளுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்பூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் வேறு ஒரு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அரசும், ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், தான் 3 நாட்களாக

ஒரு பயிற்சிக்காக வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் வந்ததாகவும், அதான் இதுகுறித்து தனக்கு தகவல் தெரியவில்லை. கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெல்பூர் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் இல்லை. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் முறையிட்டு உள்ளதாகவும், அவர்கள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டுவதற்கு உரிய வழிவகைகளை செய்வதாக உறுதி அளித்து உள்ளார் என்றும், மேலும் பெரிய ஊராட்சிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு என்று தனி திட்டங்கள் உள்ளதாகவும், அதை செயல்படுத்துவதற்கு ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.