திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வர் அவர்களின் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு இன்று (8.8. 2021) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சுப்பிரமணியன்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்டப் பிரமுகர் வைரமணி, புள்ளம்பாடி ஒன்றியக் குழுத் தலைவர். ரசியா கோல்டன் ராஜேந்திரன்,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி கருணாநிதி ஊராட்சித் தலைவர் சிங்கராயர் ஒன்றியப் பிரமுகர் செல்வராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy