காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 2021-2022-ம் ஆண்டுக்கான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
தேவைப்படுவோர் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி அதனுடன் ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பட்டா அல்லது பதிவு செய்த பத்திர நகல் ஆகியவற்றை பேரூராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்கள் அறிய பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் விவரங்கள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.