முதியோர் இல்லத்திற்கு கவுன்சிலர் செந்தில் மருத்துவ ஏற்பாடு!

0 431
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் அந்தோனியார் முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த “மக்களைத் தேடி மருத்துவம்” எனும் திட்டத்தின்

மூலம் இன்று ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய்க்கு முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்குவதற்கு வழிவகை செய்தார். தொடர்ந்து இளங்கோ தெரு, சீதக்காதி தெரு ஆகிய இடங்களில் சாக்கடையை ஆய்வு செய்து கழிவு நீரினை அகற்றும் பணிகளை மேற்கொண்டார். மேலும் தண்ணீர் சுத்தமாக வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர் அந்தோனியார் முதியோர் இல்லம் மற்றும் பள்ளிக் கூடத்தில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதை ஆய்வு செய்து அதனை சரி செய்திட பணிகளை மேற்கொண்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.