திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14.02.2022-ந் தேதி பசுமடம் காஜாப்பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டில் இட்லி
வாங்க சென்ற சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜோசப் (வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதேபோல் கடந்த 25.02.22-ந் தேதி அம்பிகாபுரம் அருகில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் பெண் ஒருவரிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ரவுடி சாகுல்மீரான் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மேற்படி வழக்கின் ரவுடி சாகுல்மீரான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, மேற்படி குற்றவாளிகளான ஜோசப் மற்றும் சாகுல்மீரான் ஆகியோர்கள்
தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி குற்றவாளிகளுக்க குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.