“தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே மோதல்” ஒருவர் சிறையில் அடைப்பு!

0 407
Stalin trichy visit

திருச்சி தாராநல்லூர் செக்கடி பஜாரை சேர்ந்தவர் மோகன் மகன் முருகேசன்(வயது 35). இவர் திருச்சி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பஸ்ஸில் கடந்த 3 மாதமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி தனது பஸ்சை ஓட்டி சென்ற போது தெப்பக்குளம் பஸ் நிறுத்தம் வந்தபோது ஏற்கனவே அங்கு நின்ற விஐடி என்ற தனியார் பஸ்ஸின் வலதுபக்க சைடு மிரர் தனது பஸ் மோதி உடைத்து விட்டதாக கூறி அந்த பஸ்சின் டிரைவர் பாலாஜி என்பவர் தன்னிடம் தகராறு செய்ததாகவும், அதற்கு நான் வேண்டுமானால் புதிதாக கண்ணாடி வாங்கி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதையடுத்து சமாதானம் அடைந்து அங்கிருந்து இரண்டு பேரும்

 

சென்றுள்ளனர். பின்னர் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து முருகேசன் தனது பஸ்சை ஸ்ரீரங்கம் நோக்கி ஓட்டிச் சென்றபோது காவிரி பாலத்தில் தனது பஸ்சை பாலாஜி வழிமறித்து கீழே இறங்கி வந்து தனது சட்டையை பிடித்து கீழே இறக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தனது கண்ணத்தில் அறைந்து விட்டு சென்றுள்ளார். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முருகேசன் கோட்டை போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த புகாரின் பேரில் திருச்சி ஸ்ரீ ரங்கம், கீழ அடையவளஞ்சான் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பாலாஜி என்கிற காண்டிபன் (வயது 25) என்பவர் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், 294(b), 323, 506(1) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலாஜி என்கிற காண்டிபனை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.