திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே முத்துமணி டவுனில் ரயில்வேக்கு சொந்தமான அசோக் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள முட்புதரில் வாக்காளர் அடையாள அட்டைகள் சிதிறிக்கிடந்தன. இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற
போலீசார், கீழே சிதறிக்கிடந்த 100க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றினர். இதை யார் இங்கு கொண்டுவந்து வீசிச்சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறன்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.