“கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது” 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

0 389
Stalin trichy visit

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ ஆரோக்கிய ஜோனட் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த கோபால் மனைவி

சுபத்ரா (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். அதேபோல் மில் காலனி வணிக வளாகம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த கருணாமூர்த்தி(வயது 44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.