தூய்மை பணியாளர்களுடன் உணவருந்தினார் கவுன்சிலர் செந்தில்!

0 357
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பர்மா காலனி, நேதாஜி தெரு, அண்ணா தெரு, திருவள்ளுவர் நகர், கலைஞர் தெரு, கணபதி தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை பணிகள் செய்யும் போது ஏற்பட்ட மேடு

பள்ளங்களை சரி செய்தார். அப்போது பர்மா காலனியில் பாதாள சாக்கடை பணிகள் செய்யும் போது தண்ணீர் குழாய் உடைந்ததை வெகுநேரமாக நின்று அதனை சரி செய்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். தொடர்ந்து மலையப்ப நகர் பகுதி முழுவதும் சாக்கடையை முழுவதுமாக தூர்வாரி சுத்தம் செய்தார். பின்னர் மலையப்ப நகர், பர்மா காலனியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். இதையடுத்து திருவள்ளுவர் நகர், ராஜவீதி, பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் சமீபத்தில் இயற்கை எய்திய நபர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் இறப்பு சான்றிதழை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.