மதுபோதையில் கையில் வாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது!
திருச்சி தென்னூர் மின் வாரிய அலுவலகம் அருகே மதுபோதையில் கையில் வாள் வைத்து கொண்டு அந்த வழியாக வந்த பொதுமக்களை வாலிபர் ஒருவர் மிரட்டி கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்ததும் பேட்ரோல் போலீஸ் எஸ்ஐ சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று கையில் வாளுடன்
மக்களை மிரட்டி கொண்டிருந்த தென்னூர் வாமடம் சப்பாணி கோயில் தெருவை சேர்ந்த வீரப்பன் (என்கிற) ராஜ்குமார் (வயது 22) என்பவரை பிடித்து தில்லைநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார். பின்னர் கொடூர ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.