மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி!
தமிழ்நாடு அரசு மண்டல மாநில வள பயிற்சி மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் சார்பாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சியுடன் கூடிய பகல்நேர பராமரிப்பு மையத்தில் இன்று பினாயில்,

சோப் ஆயில், டிஸ்வாஷ் பவுடர் மற்றும் ஓம வாட்டர் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் முடநீக்கவியல் நிபுணர் ரமேஷ் பயிற்சியை துவக்கி வைத்தனர். அரசு மகளிர் குழு தொழில் பயிற்றுனர் நிர்மலா பாலு செய்முறை பயிற்சிகளை வழங்கினார். உடன் ஹீடு இந்தியா தொண்டு நிறுவன இயக்குனர் ராணா ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.