கடன் தொல்லையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை!

0 298
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த சர்க்கார் பாளையம் அருகே உள்ள பனைய குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 78). இவர் நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும் இவருக்கு பல ஆண்டுகளாக வீட்டுக்கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவிரிக்கரை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு

 

தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.