திருச்சியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். விவசாயான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு மாடு முதல்முறையாக கருதரித்து முதலாவதாக நேற்று காளை கன்றை ஒன்று ஈன்றது. அந்த கன்றுகுட்டிக்கு ஆறு கால்களுடன் பிறந்ததை கண்டு மாட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து கால்கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும் கன்றுகுட்டி நல்ல நிலையில் உள்ளது. சிறிது நேரத்தில் ஓடி ஆடி தாயிடம் பால்குடித்தது விளையாது ஆனால் அந்த இரண்டு கால்களை பயன்படுத்தவில்லை. படுக்கும்போது மட்டும் கன்று குட்டி சிரமப்படுவதாக மாட்டின் உரிமையாளர் பன்னீர் தெரிவித்தார்.இந்நிலையில் இன்று கால் நடை மருத்துவர்கள்
கன்றுகுட் டியை மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் அந்த அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.