அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருவர் சாவு!

0 399
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பீமநகர் பங்காளி தெருவை சேர்ந்தவர் யதுமஸ்தான் (வயது 45) . இவர் கடந்த 7ம் தேதி கருமண்டபம் சோதனை சாவடி அருகே அதிகளவில் மது குடித்த நிலையில் மயங்கி கிடந்தார் எனக் கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நூர்பர்வீன் அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதேபோல் திருச்சி பெரியகடை வீதி கண்ணன் தெருவைசேர்ந்தவர் எத்திராஜ் (என்கிற) செல்வம்(வயது 68). இவர் தினமும் மது குடித்துவிட்டு

போதையில் வருவாராம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி எத்திராஜ் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சா லையில் அரியமங்கலம் உக்கடைபாலத்தில் போதையில் மயங்கி கிடந்தார் என கூறப்படுகிறது. அவரை அப்பகுதியினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.