10 வயது மகளுக்கு சூடுவைத்த குடிகார தந்தைக்கு வலை!

0 284
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 30). ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவருடைய 10 வயது மகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் தனது மகளின் காலில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த சிறுமிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின்  தாய் சிறுமியை மருத்துவமனைக்கு

 

 சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அவரது தந்தையே சூடு வைத்த விவரம் தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாய் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கிருஷ்ணகுமாரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.