“அழகிகளை வைத்து திருச்சியில் விபச்சாரம்” 2 பேர் கைது!
திருச்சி இபி ரோடு கீழதேவதானம் ஜெயக் குமார் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கோட்டை போலீசாருக்கு இரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 3 அழகிகள் மற்றும் உடந்தையாக இருந்த புரோக்கர்களான ஜெயக்குமார்
நகரை சேர்ந்த ராணி (வயது51), தஞ்சை ரோடு தோப்பு தெருவை சேர்ந்த கதிர்வேல்(வயது 33) ஆகி யோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அந்த அழகிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.