தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி முன்னிட்டு  குரு பகவானுக்கும், யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

0 340
Stalin trichy visit

தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவில் நவகிரக குரு பகவானுக்கும், யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இன்று குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுவதை முன்னிட்டு ஆலயங்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று அதிகாலை நவகிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது சந்தனம் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி திரவிய பொடி உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இந்த சிறப்பு பூஜையை கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் சோமசுந்தரம் சிவாச்சாரியார், ரவி மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.