“சூதாடிய இருவர் கைது” ரூ.72,500 பறிமுதல்!

0 414
Stalin trichy visit

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளனுக்கு சிந்தாமணி ஓடத்துறை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருச்சி உய்யகொண்டான்

திருமலை கொடாப்பு பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 55), தஞ்சாவூர் வளமர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம்(வயது 45) ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் இருவரை தப்ப விடாமல் மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ரூ.72,500-ஐ பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கோட்டை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.