“கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை” விண்ணப்பிக்க அழைப்பு!

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத்தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 74,907 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,476 மனுக்கள் பெறப்பட்டு 1,899 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை

வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) 20ம் தேதிக்கு முன்னர் கொரோனா தொற்று இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (மே மாதம் 18ம் தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20ம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்றால் இறந்தவர்கள் நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண

வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.