“செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்சை க்ளிக் செய்ததால்” ரூ.7.74 லட்சத்தை இழந்த மருத்துவர்!

0 407
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள ரெட்டியார் தோட்டத்தைச் சோ்ந்தவா் குணசுந்தரி(வயது 70). பெல் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் செல்போனுக்கு கடந்த 11ம் தேதி ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களுடைய வங்கிக் கணக்கில் பான் கார்டை இணைக்க அதிலுள்ள லிங்க்கை தொடா்புக் கொள்ளலாம் என இருந்தது. இதையடுத்து குணசுந்தரி அதில் தொடா்புகொண்டு வங்கிக்

 

கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணையும் குணசுந்தரி உள்ளீடு செய்த பிறகு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்து 74 ஆயிரம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவா் இணையம் மூலம் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.