பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

0 363
Stalin trichy visit

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும், அரசு பெட்ரோல், டீசல் விலையை GSTக்குள் கொண்டுவர வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற தவறான கொள்கை முடிவை மாற்றிட வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் மீதான மத்திய மாநில அரசுகளின் வரியை நீக்கிட வலியுறுத்தியும், திருச்சி மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமிடாக்டர் ஆணைக்கிணங்க இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உறையூர் பகுதி செயலாளர் அசோக்தேவேந்தின் வரவேற்றார். மாநகர மாவட்ட

பொறுப்பாளர் அருள்ஜோதி, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மாவட்டச் செயலாளர் கோ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் வாழையூர்குணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் வடக்கு ம.தினகரன், மாவட்ட செயலாளர் அ.பிச்சைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் பாலக்கரை பகுதி செயலாளர் அண்ணதாசன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.