“ஒரே ஜாதி சான்றிதழ் வழங்குவதாக முதல்வர் ஏமாற்றி வருகிறார்” பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

0 296
Stalin trichy visit

முத்தரையர் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பன்னீர்செல்வம் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். 2001-2021 வரையிலான காலகட்டங்களில் அதிக பலனடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 456 ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்

22ம் தேதி பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கையின் போது சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 15 லட்சம் முத்தரையர்கள் வன்னியர்களாக மாற்றப்பட்டுள்ளனர், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விவாதிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார். சீர்மரபினர் பழங்குடியினருக்கு ஒரே ஜாதி சான்றிதழ் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இதுவரையிலும் கலங்காமல் ஏமாற்றி வருகிறார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.