அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர மன்ற அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்லம்மாள், 13வது வார்டு உறுப்பினர் வாணி ஆகிய இருவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட

பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது மணப்பாறை நகரக் கழக செயலாளர்ரும், நகர்மன்ற உறுப்பினர் கீதா மைக்கேல்ராஜ் உடன் இருந்தார்.