டாடாஏஸ் வாகனம் கவிழ்ந்து உடல் நசுங்கி ஒருவர் பலி!

0 453
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் 30 வயதான ஜெயச்சந்திரன். இவர் மணப்பாறையிலிருந்து டாடா ஏஸ் வாகனத்தில் ஜெனரேட்டர் ஏற்றிக்கொண்டு பாடாலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டாடாஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வண்டியின் பின்புறம் ஜெனரேட்டர் மீது அமர்ந்த ஜெயச்சந்திரன்

கீழே விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஜெயச்சந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.