கழிவுகளை காலி மனையில் கொட்ட முயன்ற மாநகராட்சி டிரைவர் பணியிடை நீக்கம்!

0 298
Stalin trichy visit

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே சாக்கடை கால்வாயை தூர்வரப்பட்டு, கழிவுகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை மாநகராட்சி லாரியில் அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் கொட்ட ஏற்றிவிடப்பட்டது. ஆனால் அந்த லாரியை அதன் டிரைவர் அரியமங்கலம் குப்பைக்கிடங்குக்கு ஓட்டிச்செல்வதற்கு பதிலாக மன்னார்புரத்தில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள காலி இடத்தில்

கொட்ட முயன்றதாக தெரிகிறது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர் லாரியை அங்கிருந்து எடுத்துச்சென்றுவிட்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காலி இடத்தில் கழிவுகளை கொட்ட முயன்றது ஒப்பந்த டிரைவரான செல்வா (வயது 28) என்பது தெரியவந்தது. உடனே டிரைவர் செல்வாவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.