“நாளை சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்” முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

0 318
Stalin trichy visit

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்

இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு சிம்ம, பூத, அண்ண ரிஷப, யானை, சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை)

நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்த்தேக்கத் தொட்டி வைக்கப்பட்டு வருவதுடன், தேர் முழுவதும் வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு

வருகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படுகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம் இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாதரனையும் நடைபெறுகிறது. 26ம் தேதி அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.