“தொழிலில் நஷ்டம்” மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

0 300
Stalin trichy visit

கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் திருச்சி தில்லைநகரில் பணம் பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனத்தில் புரோக்கராக பணியாற்றி வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 11-ந் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை தனியார்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.